உயிரிழந்த வீராங்கனையின் கடைசி வாட்சாப் ஸ்டேட்டஸ்.! கண்ணீர் தரும் பதிவு.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா ராணி மேரி கல்லூரியில் முதல் வருடம் படித்து வந்துள்ளார். இவருக்கு மூட்டு வலி பிரச்சனை ஏற்பட்டு கடந்த நவம்பர் 7ல் கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

அவருக்கு அதிகப்படியான உத்திரப் போக்கு ஏற்பட்டதால் காயத்திற்கு போடப்பட்ட கட்டு மிக இறுக்கமாக கட்டப்பட்டது. இதனால் அவரது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டது. இது ரத்த கட்டாக மாறியது  எனவே கடந்த எட்டாம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரியா கொண்டு செல்லப்பட்டார். அங்கு நவம்பர் 9ஆம் தேதி அறுவை சிகிச்சையின் மூலமாக அவரது கால் அகற்றப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் பிரியா இன்று காலை உயிரிழந்து இருக்கின்றார். அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்ததாகவும், சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகவும் மருத்துவத்துறை சார்பில் சமீபத்தில் அறிக்கை வெளியாகியது. அவரது இறப்பு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் இந்த மரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பிரியா தனது செல்போனில் வைத்த ஸ்டேட்டஸ் ஒன்று தற்போது நண்பர்களால் பகிரப்பட்டு வருகின்றது. 

அதில் அவர், "என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் யாரும் கவலைப்பட கூடாது. சீக்கிரம் கம் பேக் கொடுப்பேன். அதனால் எதற்கும் பீல் பண்ணாதீங்க. மாஸ் என்ட்ரி கொடுப்பேன். என்னோட கேம் என்ன விட்டு போகாது. நீங்க நான் திரும்பி வருவேன்னு நம்பிக்கையோட இருங்க. லவ் யூ.!' என்று தெரிவித்துள்ளார். இவ்வளவு நம்பிக்கையுடன் பதிவிட்ட அந்த பெண் இப்பொழுது உயிரோடு இல்லை என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Football player Priya death last whatsap status


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->