தமிழ்நாட்டில் பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது; ரங்கராஜ் பாண்டே பதில்..!
For the BJP to grow in Tamil Nadu it is not enough to work only in Annamalai says Rangaraj Pandey
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா வளர வேண்டும் என்றால் அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது. அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும்' என சாணக்யா யூடியூப் சேனலின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
ரங்கராஜ் பாண்டே, தங்களின் நிறுவனம் கடந்து வந்த பாதை குறித்து விளக்கிய நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி குறித்த கேள்விக்கு ரங்கராஜ் பாண்டே பதிலளித்தார்.
''பா.ஜ., மட்டுமல்ல, அ.தி.மு.க., நா.த.க., த.மா.கா., என எந்த கட்சியாக இருந்தாலும், தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்தால் மட்டுமே கட்சியை வளர்த்தெடுக்க முடியும். நாட்டின் பிரதமரான மோடி ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைக்கிறார்.'' என சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மோடி பிரதமர் வேட்பாளராக இருந்த போது, அப்போதைய பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம், ரிப்போர்ட் கார்டு கொடுத்தார் என கூறியதோடு, அதில், மோடி நாடு முழுவதும் தான் எத்தனை கூட்டங்களில் கலந்து கொண்டேன் உள்ளிட்ட விபரங்கள் இருந்தது என குறிப்பிட்டார்.
அத்துடன், (மோடியை) அவரை விட கூடுதலாக அரை மணி நேரம் தொண்டர்கள் உழைத்தால், 2036-க்குள் பா.ஜ., தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது. அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும்,. என்று அவர் பதிலளித்துள்ளார்.
English Summary
For the BJP to grow in Tamil Nadu it is not enough to work only in Annamalai says Rangaraj Pandey