முதல்முறையாக தனுஷ்கோடியில் சாதிக்கவுள்ள மாற்றுத்திறனாளி இளைஞர்.. குவியும் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


சென்னையைச் சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் முறையில் இலங்கை தலைமன்னார் தனுஷ்கோடி பாக் நீர் கடல் பகுதியை  நீந்திக் கடந்த முதல் மாற்றுத்திறனாளி இளைஞர் என்ற சாதனையை  நிகழ்த்த உள்ளார். இதற்காக பலரும் இவருக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் மற்றும் வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ ராம் ஸ்ரீநிவாஸ் 29 வயது இளைஞரான இவர் இரண்டு கை கால்களும் செயல்படாத மனவளர்ச்சிக்குரிய செரிபரல் பால்ஸி என்ற நோயால் பாதிக்கப்பட்ட  மாற்றுத்திறனாளி ஆவார். இவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தங்கள் மகனை ஏதோ ஒரு துறையில்  சாதிக்க வைக்க வேண்டும் என அவரது பெற்றோர் நான்கு வயது முதலே அவருக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய மாணவர் படை சார்பாக நடத்தப்பட்ட கடலூர் மற்றும் பாண்டிச்சேரி இடையேயான 5 கிலோ மீட்டர் கடலில் நீந்தி சாதனை படைத்தார். இதற்காக மத்திய அரசின் சமூக நீதித்துறை மாற்றுத்திறனாளிகளுக்கான ரோல் மாடல் ஒரு தெய்வத்திற்கு வழங்கி கௌரவித்தது. மேலும் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கடலூர் மற்றும் பாண்டிச்சேரியிலேயே  10 கிலோமீட்டர் கடலில் நீந்தி சாதனை படைத்தார். அப்போதைய பாண்டிச்செல்வி முதல்வர் நாராயணசாமி  இவரைப் பாராட்டி பதக்கம் வழங்கினார். இதுபோன்று 40க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து  தனுஷ்கோடி வரையிலான 32 கிலோமீட்டர்  தூர பார்க் ஜல சந்தை கடலை  நீந்தி கடக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது பெற்றோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரை  13 ஆம் தேதி சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டனர். பொதுவாக நீச்சல் அடிப்பவர்கள் கை கால்களை அசைத்து ப்ரீ ஸ்டைலில்  நீந்துவார்கள். இவருக்கு கை கால்கள் செய்துள்ளதால்  தனது நெஞ்சை பயன்படுத்தி பிரஸ்ட் ஸ்ட்ரோக் முறையில் நீந்தி சாதனை படைக்க உள்ள மாற்றுத்திறனாளி இவர் ஆவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

For the first time in Dhanushkodi the differently abled youth is getting accolades


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->