குளம் போல் காட்சியளித்த வயல் வெளிகள் - விவசாயிகள் கவலை.!
formars worry for water fill land in nagai
நாகை மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக நாகை மாவட்டம் முழுதும் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது.
இந்த மழை விவசாயிகளுக்கு நிம்மதியை அளித்தாலும், நேற்று முதல் மாவட்டம் முழுவதும் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையால் சாகுபடி செய்துள்ள வயல்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
அதுமட்டுமல்லாமல், வாய்க்கால்களிலும் அதிக அளவு தண்ணீர் செல்வதால் வயலில் இருந்து தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாகுபடி வயல்கள் எல்லாம் குளம் போல் மாறி பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வெளியே தெரியாத அளவிற்கு உள்ளதால் விவசாயிகள் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்து 30 - 40 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
formars worry for water fill land in nagai