குட்கா முறைகேடு வழக்கில் திடீர் திருப்பம்! அதிமுக மாஜி அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவு! - Seithipunal
Seithipunal


குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் சி.வி ரமணா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்படுவதாகவும் வரி இழப்பு நடைபெற்றதாகவும் வருமானவரித்துறைந்ததற்கு தகவல் கிடைத்தது.

தகவலை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் குடோன் உரிமையாளர் மாதவராவ் ,சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் குட்கா வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிகை வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் , சி.வி ரமணா, முன்னாள் டிஜிபி மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மத்திய மாநில அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ யை சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும்  காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளித்தார்.

தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சிவி ராமணா  முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உட்பட 27 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former AIADMK Ministers C Vijayabaskar and CV Ramana directed to appear in person


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->