முன்னாள் அமைச்சர் நாசர் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் நாசர் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!!

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மு.க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. அப்போது பால்வளத்துறை அமைச்சராக நாசர் என்பவர் பொறுப்பேற்றார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொண்டார். 

அப்போது பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நாசர் நீக்கப்பட்டு, மனோ தங்கராஜ், பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதிலிருந்து நாசர் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். 

இந்தநிலையில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் நாசருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர். 

மேலும், நாசருக்கு இதயம் சார்ந்த அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். அவர் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former minister nasar admitted hospital in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->