தமிழகத்தில் 4 ஏடிஎஸ்பி-க்கள் இடமாற்றம்.!
four adsps transfer in tamilnadu dgp order
தமிழக காவல்துறையில் நான்கு ஏடிஎஸ்பி-க்களை இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-
"கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவு ஏடிஎஸ்பி பிரேமானந்தன் கோயம்புத்தூர் மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையக ஏடிஎஸ்பி தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி சவுந்தரராஜன் நீலகிரி மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
four adsps transfer in tamilnadu dgp order