தென்காசியில் உடல்நலக் குறைவால் 4 சிறுவர்கள் மருத்துவனையில் அனுமதி - விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தென்காசியில் உடல்நலக் குறைவால் 4 சிறுவர்கள் மருத்துவனையில் அனுமதி - விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாலிபன் பொத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, சிறுவர்கள் நான்கு பேரும் போதை மாத்திரைகளைச் சாப்பிட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் படி அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தென்காசி எஸ்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவர் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காசிராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது நான்கு சிறுவர்களும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four boys admitted hospital in tenkasi for ate drugs tablet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->