#கோவை || பழங்குடியினர் கிராமத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடி..!! 15 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது..!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விவசாயம் செய்வது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பசுமணி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கஞ்சா செடிகளை பயிரிடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் பயிர்களுக்கு நடுவே ஊடுபயிராக கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா செடிகளை பயிரிட்டது அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லன், பழனிச்சாமி, ராஜப்பன் மற்றும் வேலுச்சாமி என்பதை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார்  பயிரிடப்பட்ட 15 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரம் மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கு தெரிய வரவே பசுமணி கிராமத்திற்கு விரைந்துள்ளார். பசுமணி கிராமத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளை பார்வையிட்ட அவர் பழங்குடியின மக்களுக்கு போதைப் பொருளான கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களிடையே பேசியுள்ளார். என்ன சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four people arrested for cultivating ganja in Coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->