திருப்பத்தூரில் பிறந்த குழந்தையை விற்ற 4 பேர் கைது.!  - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகிரி மனைவி இந்துமதி. கணவரை இழந்த இவர் ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனி ஒன்றில் வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

அப்போது இவருக்கும், சின்ன மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஜீவா, என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது தகாத உறவாக மாறியதால் யாருக்கும் தெரியாமல் நாட்றம்பள்ளியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இதன் மூலம் இந்துமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. 

இருப்பினும், இது குறித்து தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தெரிந்தால் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் இந்துமதி இருந்து வந்தார். அந்த சமயத்தில் ஜீவா, பிறந்த குழந்தை தனக்கு வேண்டாம் என்றும், வேறு யாராவது குழந்தை இல்லாதவர்களுக்குக் கொடுத்து விடலாம், பிறகு நாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று இந்துமதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இதற்கு இந்துமதி சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஜீவா தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவருக்கு, குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த, இந்துமதி சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். 

அதன் படி வழக்குப் பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து குழந்தை விற்பனையில் தொடர்புடைய ஜீவா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பப்பி, மணிகண்டன் மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for baby sales in tirupathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->