ஈரோடு || பெருந்துறை அருகே கள்ளநோட்டு விற்பனை செய்த 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திங்களூரில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று சந்தை நடைபெறும். இந்த சந்தையில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் நடைபெற்ற சந்தையில் ஏராளமான கூட்டம் இருந்தது. இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று கடைகளில் 100, 200, 500 ஆகிய போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி வந்துள்ளனர். 

இதன் பின்னர் கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு குறித்து சந்தையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார். இந்த பணத்தை வாங்கிய விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன் படி விரைந்து வந்த போலீசார் முதியவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் சத்தியமங்கலம் இக்கரைபள்ளியை சேர்ந்த ஜெயபால் என்பதும், இவரது மகன் ஜெயராஜ் என்பவர் வீட்டில் யூடியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் ஜெயராஜ், அவரது தந்தை மனைவி, வீட்டில் வேலை செய்பவர் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரம், கள்ள நோட்டு, சந்தைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்த கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for black money in erode


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->