புது வண்ணாரபேட்டை : போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரித்த 4 பேர் கைது.!
four peoples arrested for land exproperation of fake document in new vannarapet
புது வண்ணாரபேட்டை : போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரித்த 4 பேர் கைது.!
சென்னையில் உள்ள திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பெண் வக்கீல் சுதா, நசீரா பாத்திமா உள்ளிட்டோர் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அந்த மனுவில், "சென்னையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் எங்களுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்பிலான 1,310 சதுரடி நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி, மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த அமுதலட்சுமி, கத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த கணேசன், புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மன்சூர் அகமது மற்றும் இர்பான் உள்ளிட்ட நான்கு பேர் போலி ஆவணங்கள் மூலம் இந்த நிலத்தை அபகரித்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீசார் தீவிரமாக செயல்பட்டு இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நான்கு பேரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அபகரித்த நிலம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
English Summary
four peoples arrested for land exproperation of fake document in new vannarapet