கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை - 4 பேர் கைது.!
four peoples arrested for sales ipl ticket in black
இந்தியாவில். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இந்த ஐபிஎல் போட்டியை முன்னிட்டு அரசு சார்பில் இலவச பேருந்து வசதி உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது.

இதற்கிடையே ஐபிஎல் போட்டியைக் காண கள்ளச் சந்தையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அப்போது, மைதானத்தை சுற்றியுள்ள இடங்களில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு நான்கு பேர் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி போலீசார் விரைந்து வந்து புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 7 டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
English Summary
four peoples arrested for sales ipl ticket in black