ரெயில்வேத்துறை வேலை - 1 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்.!
one crores peoples apply railway department job
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெயில்வே துறையில் காலியாகவுள்ள 11,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதையடுத்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப அவகாசம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. தற்போது தேர்வு நடத்துவதற்கான நடைமுறைகளில் ஆர்.ஆர்.பி ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தேர்வுக்கு 1.21 கோடிக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளதாக ரெயில்வே தேர்வு வாரிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணிகளுக்கு சுமார் 63 லட்சம் விண்ணப்பதாரர்களும், டிகிரி கல்வி தகுதி கொண்ட பண்ணியிடங்களுக்கு சுமார் 58 லட்சம் பேரும் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
one crores peoples apply railway department job