நாகை பேருந்து நிலையத்தில் 1.5 கிலோ திமிங்கில உமிழ் நீர் பறிமுதல் - ஒருவர் கைது.!!
amberis seized in nagapatinam bus stand
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் வெளிப்பாளையம் போலீஸார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகம்படும் படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியத்தியதில், அந்த வாலிபர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வல்லவிளை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மில்டன் ஜார்ஜ் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்த பையில் சோதனை செய்ததில், அரசால் தடைசெய்யப்பட்ட அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் இருப்பது தெரியவந்தது. ரூ.1.50 கோடி மதிப்பிலான 1.5 கிலோ உள்ள அந்த திமிங்கில உமிழ் நீரைப் பறிமுதல் செய்த போலீஸார், மில்டன் ஜார்ஜைக் கைது செய்தனர்.
பின்னர் இந்த திமிங்கில உமிழ்நீரை, வனத் துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
amberis seized in nagapatinam bus stand