வேலூர் : மகன் கண்முன்னே மின்சாரம் தாக்கி நரிக்குறவர் உயிரிழந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி மகன் கண் முன்னே துடிதுடித்து நரிக்குறவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் ஏரிபுதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (40). இவர் ஊசிமணிகளை விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்களுக்கு இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் விஜயன், எதிர் வீட்டில் வசிக்கும் தங்கராஜ் என்பவரது வீட்டில் மின்சாரம் வரவில்லை என்று, அதனை சீர் செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தன் மகன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த விஜயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foxwalker dies due to electrocution in Vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->