இலவச கண் சிகிச்சை முகாம்..300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இதில் கண்ணில் புரை, சதை வளர்ச்சி, நீர் அழுத்தம், நீர் வடிதல், கண் எரிச்சல், கண்வலி, தலைவலி, தூரப்பார்வை, கிட்ட பார்வை ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்து 40க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷ்னல் ஜேசிஐ ராணிப்பேட்டை ஆஸ்ட்ராய்டு, சென்னை போரூர் ராமச்சந்திரா கண் மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் சரண்ராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஜோதி, காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்ணில் புரை, சதை வளர்ச்சி, நீர் அழுத்தம், நீர் வடிதல், கண் எரிச்சல், கண்வலி, தலைவலி, தூரப்பார்வை, கிட்ட பார்வை ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்து 40க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர்.

இதில் ஜேசிஐ நிறுவனத் தலைவர் மைக்கேல்பிரபுதாஸ், மண்டல ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா, திட்ட இயக்குனர் யோகமூர்த்தி, குழு உறுப்பினர் அனு, பார்த்திபன், முன்னாள் தலைவர் வெங்கட்ரமணி, முகாம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் பொருளாளர் சரவணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free Eye Camp More than 300 people benefited


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->