ஐந்து மாவட்டங்களில் இலவச சேவை - பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக சட்டசபையில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் குறிப்பிட்டுள்ள சில முக்கியம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்:-

* ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் Wifi இணைய சேவை வழங்கப்படும். குலசேகரன்பட்டினத்தில் விண்வெளித் தொழில் பூங்கா அமைகிறது. சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ. 12,000 கோடி ஒதுக்கீடு. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

* பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும். விடியல் பயணம் திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும். மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்.

* தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் "நியோ டைடல்" பூங்காக்கள் அமைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா ரூ. 120 கோடியில் அமைக்கப்படும். விருதுநகர் மற்றும் சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free wifi in five district in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->