வருமான வரித்துறை சோதனை | அத்தனையும் பொய் - ஜீ ஸ்கொயர் நிறுவனம் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


வருமான வரித்துறை சோதனையில் 3.5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு, ஜீ ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

உங்களுக்கு சந்தேகம் என்றால் நீங்கள் வருமானவரித்துறை இடமே நேரடியாக சென்று இது குறித்து கேட்டுக் கொள்ளலாம் என்றும் ஜி ஸ்கொயர் தன்னுடைய ஜி ஸ்கொயர் நிறுவனம் தன்னுடைய விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

சுமார் 7 நாட்கள் ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் அதன் கிளைகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரிதுறை சோதனை நடைபெற்றது. இந்த வருமான வரி சோதனையில் முறைகேடு ஏதுனும் கண்டறியப்பட்டதா? ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால், ஜி ஸ்கொயர் நிறுவனம் 700 கோடி ரூபாய் வரியைப்பு செய்துள்ளதாகவும், 3.5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு சில செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

இந்த நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் இந்த தகவல் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்த நிறுவனத்தின் அறிக்கையில், வருமானவரித்துறை சோதனைகள் 3.5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கிறோம்.

[இந்த வருமானவரித்துறை சோதனை என்பது வழக்கமான ஒரு சோதனை தான். எங்கள் நிறுவனம் சரியாக வரி செலுத்தி உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருமானவரிமானவரித்துறையினரின் இந்த சோதனைக்கு எங்களுடைய நிறுவனம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி உள்ளது.

எங்களுடைய நிறுவனத்திற்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் நிகர வருமானம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை நாங்கள் திட்டிவிட்டமாக மறுக்கிறோம்.

இந்த வருமான வரித்துறை சோதனையின் மூலம் எங்கள் நிறுவனத்துடன் சில அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்ட வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G Square Explain for IT Raid 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->