வரலாறு காணாத விலை உயர்வு! இல்லத்தரசிகளுக்கும், பிரியாணி பிரியர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த ஓமலூர் சந்தை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாய் தொட்டிருப்பது இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று சேலம் மாவட்டம், ஓமலூர் பூண்டின் சந்தையில் வரத்து குறைந்ததால், ஒரு கிலோ பூண்டு ரூபாய் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  தமிழகத்திற்கு பூண்டு கொண்டு வரப்பட்டு வருகிறது. 

குறிப்பாக இந்த பூண்டு விளையக்கூடிய இந்த வட மாநிலங்களில் விளைச்சல் குறைந்ததால், வரத்து குறைந்து உள்ளதாகவும், இதன் காரணமாக பூண்டின் விலை தற்போது உயர்ந்து உள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

சேலம், ஓமலூர் சந்தைக்கு வழக்கமாக 100 டன் வரவேண்டிய பூண்டு, தற்போது 20 டன் அளவு மட்டுமே வந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போது ஓமலூர் சந்தையில் ஒரு கிலோ நீலகிரி பூண்டு ரூபாய் 350 முதல், ரூபாய் 500 வரை விற்பனையாகி வருகிறது. பூண்டு விலை ஏற்றத்தின் காரணமாக, பூண்டின் விற்பனை மந்தமாகிவிட்டதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு பூண்டு முக்கியமானது என்பதால், பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளின் விலையும் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Garlic Rate Hike in Salem Omalur Market


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->