விபத்தில் உயிர் பிழைத்த நபர் தூக்கு போட்டு தற்கொலை.. அதிர்ச்சி தரும் காரணம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி எம்ஜிஆர் நகரில் சீனிவாசன் என்ற 20 வயது நபர் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் கொரியர் வேலை செய்யும் பிரபு என்ற 20 வயது நண்பர் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஒரு பிறந்தநாள் விழாவிற்கு செல்ல பைக்கில் பயணித்தனர். சீனிவாசனின் பைக்கை பிரபு ஓட்டி சென்றுள்ளார். செஞ்சி அருகே நரசிங்கராயன்பேட்டை பகுதிக்கு வந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தகவல் பலகையின் மீது மோதியது. 

அப்போது விபத்து ஏற்பட்டதால் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், பைக்கை ஓட்டி சென்ற பிரபு உயிர் தப்பினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நண்பனின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபு பாட்டிலை உடைத்து தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இதனை அடுத்து மருத்துவர்கள் அவரை முதல் உதவி கொடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சீனிவாசன் மறுநாள் அதிகாலை நேரத்தில் தூக்கில் தொங்கி உயிரை விட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gingee Friends met with Accident and suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->