#செஞ்சி : தந்தை பாலியல் குற்றவாளி ஆனதால், மகன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே அம்மன் குளத்து மேடு பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கு நவீன் குமார் என்ற 17 வயது மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி முதலாம் வருடம் படித்து வந்துள்ளார். 

கடந்த 2006 இல் தந்தை அருள் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் அவர் மீதான குற்றத்தை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது. இதனால், அருளை கடலூர் மத்திய சிறையில் போலீசார் அழைத்தனர். எனவே மன உளைச்சலில் வீட்டில் இருந்த மகன் நவீன் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது பற்றி அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று நவீன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gingee men suicide for father sexual harassment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->