இளைஞரை காப்பாற்ற.. தாயை பறிகொடுத்த மகன்.! செஞ்சி அருகே சோகம்.!  - Seithipunal
Seithipunal


செஞ்சி அருகே ஏற்ப்பட்ட விபத்தில் ஒரு மகன் தாயை பறிகொடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் வினோத் என்ற நபர் தனது தாய் குப்பம்மாவுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்பொழுது சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு இளைஞர் அமர்ந்துகொண்டு வாகனத்தை எடுக்க முயன்றுள்ளார்.

அவர் மீது மோதிவிடாமல் இருக்க அந்த இருசக்கர வாகனத்தை ஒதுக்கி விட்டு செல்வதற்காக அவர் சாலையின் நடு பக்கத்திற்கு நகர்ந்த போது நிலை தடுமாறி கீழே விழ அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் ஏறி இறங்கியது. இதில் அவருக்கு பின் அமர்ந்து வந்த தாய் குப்பமாவின் தலையில் பேருந்து ஏறி உள்ளது. 

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த குப்பம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரையும் இந்த வீடியோ பதற வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ginger bike accident Mother Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->