இதான் திராவிட மாடல் ஆட்சி! ரூ.1000 விவகாரத்தை கையிலெடுத்த ஜி.கே.வாசன்!
GK Vasan Campaign in Thenkasi BJP Candidate
மகளிர் உரிமை தொகை காலையில் வந்தால். இரவுக்குள் டாஸ்மார்க் மூலம் தமிழக அரசின் கஜானாவுக்கே திரும்பி விடுவதாகவும், இதுதான் திராவிட மாடன் ஆட்சி என்றும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்காசி தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் மாநில ஜிகே வாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், "இந்த தொகுதியின் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் தான் வேட்பாளர் ஜான் பாண்டியனை பிரதமர் நரேந்திர மோடி தாமரை சின்னத்தில் நிறுத்தி உள்ளார்.
தற்போதைய தொகுதியின் பிரச்சனை மற்றும் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் சரியாக செயல்பட்டு இருந்தால், இந்த பிரச்சனைகளில் 60% தீர்க்கப்பட்டு இருக்கும்.
பொய் வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான தமிழக அரசு, மக்கள் விரோத அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை என்று கூறிவிட்டு, அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த உரிமை தொகையை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வழங்கக்கூடிய இந்த தொகையும் வாங்கிய அன்று இரவே டாஸ்மார்க் மூலமாக மீண்டும் தமிழக அரசின் கஜானாவுக்கு திரும்பி சென்று விடுகிறது. இதுதான் இந்த திராவிட மாடலின் ஆட்சி.
ஆனால் மத்தியில் இருக்கக்கூடிய நம்மளுடைய பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, இந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் 37 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, முத்ரா கடன் தள்ளுபடி, சேமிப்புக் கணக்கு என பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு மக்களுக்கு வேதனைகளை வழங்குவதில் சாதனை படைத்தது கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு மக்களுக்கான பல்வேறு சாதனை திட்டங்களை கொடுத்து கொண்டு இருக்கிறது" என்று ஜி கே வாசன் தனது பரப்புரையில் தெரிவித்தார்.
English Summary
GK Vasan Campaign in Thenkasi BJP Candidate