மின்சாரக் கம்பியில் சர்க்கஸ் காட்டிய ஆடு - வைரலாகும் புகைப்படம்.!!
goat walk at electric wire in uttar pradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மின் கம்பியில் படர்ந்து வளர்ந்திருந்த தாவரத்தைக் கண்ட ஆடு ஒன்று அதனை சாப்பிடுவதற்காக அருகில் உள்ள கட்டிடத்தில் ஏறி அங்கிருந்து மின்சார கம்பிக்கு சென்றது.
பின்னர் மின்சார கம்பிகளில் மெதுவாக நடந்து சென்று மின்கம்பியில் படர்ந்து இருந்த தழையை சாப்பிட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஆடு மின்கம்பியில் நடந்து சென்றதை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் பல்வேறு பதிவுகளை செய்து வருகின்றனர். அதாவது, இந்த ஆடு எப்படி மின்சார கம்பியில் ஏறியது மற்ற ஆடுகளை போல் அல்லாமல் சூப்பர் மேன் தங்கை. இதனை பார்க்கும் போது எனது இதயம் நடுங்குகிறது. மின்சாரம் தாக்கி ஆடு கீழே விழுமோ என அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த ஆடு சாதாரண ஆடு இல்லை "ஸ்பைடர் மேன்" ஆடு. இது குரங்கா? அல்லது சர்க்கசில் இருந்து தப்பி வந்த விலங்கா?, ஆடுகள் பொதுவாக தரையில் தான் புல் மேயும் இந்த ஆடு மின்சாரக் கம்பியில் உள்ளே தேடி சென்றுள்ளது என்று பல்வேறு விதமாக கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.
English Summary
goat walk at electric wire in uttar pradesh