நவால்னி கூட்டாளி 4 பேருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை.. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!
Navalnys four accomplices sentenced to five-and-a-half years in prison Court verdict
நவால்னியுடன் தொடர்பில் இருந்த கூட்டாளிகளுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஸ்கோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக செயல்பட்டதாகவும் அரசை கவிழ்க்க சதி தீட்டி வருவதாகவும் ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நவால்னி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நவால்னியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவால்னி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் ரஷியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இதையடுத்து நவால்னிசாவில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய மனைவி சர்வதேச கோர்ட்டில் முறையீட்டு உள்ளார்.இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்தநிலையில் ரஷியாவில் நவால்னியுடன் தொடர்பில் இருந்தவர்களை அந்த நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள். அந்த வகையில் மாஸ்கோவில் உள்ள செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அன்டோனினா பேவர்ஸ்காயா, செர்ஜி கரேலின், கான்ஸ்டான்டின் கபோவ் மற்றும் ஆர்டெம் க்ரீகர் உள்ளிட்டவர்கள் நவால்னிக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு மாஸ்கோ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.இந்தநிலையில் விசாரணை முடிவில் அவர்கள் 4 பேருக்கும் ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஸ்கோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது..
English Summary
Navalnys four accomplices sentenced to five-and-a-half years in prison Court verdict