சென்னை மக்களுக்கு குட் நியூஸ்!...14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையில் மட்டுமே பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பறக்கும் மின்சார ரெயில் சேவை இயக்கப்படுகிறது. மேலும்  இன்று முதல் இருமார்க்கமாகவும் 90 ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், சில பணிகள் முடிந்தபிறகு முழுமையான ரெயில் சேவை தொடங்கும் என்று  ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் பல நாட்களுக்கு பிறகு ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில் பயணிகள் உற்சாகத்தில் திகைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Good news for the people of chennai flying train operation between chennai beach velachery from today after 14 months


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->