அரசு உண்டு உறைவிடப்பள்ளி இரவு காவலரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுகோணாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் நொச்சிகுட்டை அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். 

இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 45). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. 

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை பழனிச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government boarding school night guard's wife commits suicide by drinking poison


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->