பெண்களை 'ஓசி டிக்கெட்' என்று நிறுத்தாமல் சென்ற பேருந்து - சிறை பிடித்த மக்கள் - வேடசந்தூரில் பரபரப்பு..!
Government Bus Driver Did not Stop The Bus For Ladies in Vedasanthur
தமிழக முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவற்றில் பெண்கள் சாதாரண மாநகர பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று நடைமுறைப் படுத்திய திட்டம் ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களையம், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டது.
ஆனால் தற்போது இந்த இலவச பயணத் திட்டம் பல்வேறு தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த சிங்கிலிக்காம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்ற அரசுப் பேருந்தை மறித்து அங்குள்ள மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அங்குள்ள பெண்களை கேட்டபோது, " இங்கு வரும் அரசு பேருந்துகள் பெண்களை ஓசி டிக்கெட் என்று கூறி நிறுத்தாமல் செல்கின்றனர். மேலும் ஒரு கர்ப்பிணி பெண் பஸ்ஸில் ஏற ஓடிச் சென்ற போதும், பஸ்ஸை நிறுத்தாமல் சென்றதால், அந்த பெண் கல் தடுக்கி கீழே விழுந்துள்ளார்.
இதை வீடியோ எடுத்த ஒரு இளைஞரின் கைபேசியை பேருந்தின் நடத்துனர் வாங்கி உடைத்து விட்டார்" என்று கூறினர். இதையடுத்தே அந்த கிராம மக்கள் பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற கூம்பூர் சப் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் இனி இந்த தவறு நடக்காது என்று கூறிய பிறகே பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.
English Summary
Government Bus Driver Did not Stop The Bus For Ladies in Vedasanthur