அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சு வலி! பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு பலியான சோகம்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் இருந்து விருதுநகர் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு  அரசு பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்றது. பேருந்தின் ஓட்டுநராக தென்காசி பெத்தநாடார்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்மேகம் (வயது 47) என்பவர் பணியில் இருந்தார். 

பேருந்தின் நடத்தினராக வண்ண முத்துக்குமார் இருந்தார். ராஜபாளையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

அவருக்கு வலி அதிகமாக ஏற்பட்டதால் ஓரமாக பேருந்தை நிறுத்தினார். இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஓட்டுனருக்கு நடத்துனர் தண்ணீர் கொடுத்தார். 

பின்னர் தெளிவான நிலைக்கு திரும்பியதும் கார்மேகம் தொடர்ந்து பேருந்தை இயக்கி ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தார். 

இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பயண சீட்டு எடுத்திருந்த பயணிகளை மட்டும் வேறு பேருந்துக்கு மாறிவிடப்பட்டது. தொடர்ந்து நடத்துனர், கார்மேகத்தை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். 

அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு இ.சி.ஜி உள்பட பல்வேறு பரிசோதனைகளை செய்து தீவிர சிகிச்சை அளித்தனர். 

இந்த தகவலை ஓட்டுனரின் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி விரைந்து அரசு மருத்துவமனைக்கு வந்தார். 

இந்நிலையில் ஓட்டுனர் கார்மேகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து ஓட்டுனரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government bus driver sudden chest pain securing passengers after Death 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->