அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் - நாய் மீது பேருந்தை ஏற்றியதால் நேர்ந்த அவலம்.!
government bus driver suspend for bus moved on dog
நாய் மீது பேருந்தை ஏற்றிய அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெருன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள செக்கானூரணி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நமசிவாயம் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் பணிமனையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்துக்கு பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து ஒரு நாய் மீது மோதிவிட்டது. இதில் நாய் கால் முறிந்தது. ஆனால், ஓட்டுநர் அந்த பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதை பார்த்த ழக்கறிஞர் ஒருவர் பணிமனைக்கு புகார் தெரிவித்தார்.
அதன் படி விசாரணை செய்த பணிமனை நிர்வாகம், புகார் உண்மை என்று தெரியவந்ததால், அடிபட்ட நாயை சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல், பணியில் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக ஓட்டுநர் நமசிவாயத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
English Summary
government bus driver suspend for bus moved on dog