அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் : அதிரடி வேட்டையில் போலீசார்..!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் தடம் எண் 1 ல் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி சென்ற பேருந்து மீண்டும் பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்தது. 

அப்போது நேற்று மாலை மரக்காவலசை அருகே பேருந்து வந்துக் கொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். 

இதைத் தொடர்ந்து சேதுபாவா சத்திரம் வழியாக இரண்டாம்புளிக் காடு சென்றவர்கள் பேராவூரணி பேருந்து நிலையம் தடம் எண் பத்தைச் சேர்ந்த பேருந்து பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு சென்றனர். 

அங்கிருந்து அழகியநாயகிபுரம் வழியாக ஒட்டங்காடு சென்று, மேலஒட்டங்காடு என்ற இடத்தில் பேராவூரணி அரசு போக்குவரத்து கழக நகர பேருந்து பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்த தடம் எண் 6 ஏ பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும், மர்ம நபர்கள் குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government bus mirror broke


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->