நாய்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை..சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு!
Government officials are not paying attention to controlling dogs Social activists blame
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களில் தெரு நாய்கள் கடித்ததில் 30 பேர் காயமடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க கருத்தடை அறுவை சிகிச்சை, தடுப்பூசி போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தற்போது கொடை வெயில் காலம் ஆரம்பமாகிஉள்ள நிலையில், புதுச்சேரியில் ஒவ்வொரு தெருவிலும் தெரு நாய்கள் அதிக அளவில் இருப்பதை காணமுடிகிறது. முன்பெல்லாம் நாய்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, கருத்தடை அறுவை சிகிச்சை, தடுப்பூசி போடுதல், என்று செய்துவந்த நிலையில், தற்போது நாய்கள் விஷயத்தில் அரசு அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் தெரு நாய்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டது, அதில் நாய்களை பிடித்தால் கருத்தடை செய்து அதே இடத்தில் விட்டுவிட வேண்டும். அப்படி விடும் நாய்கள் உயிருடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது நாய்களை பிடித்து கருத்தடை செய்ய அரசு ஊழியர்கள் அல்லது outsourcing முறையில் வைக்கப்படும் ஆட்கள் மிகவும் அச்சப்படுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாய்கடியால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், எனது பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், நாய்களுக்கு வெறி பிடித்து பொதுமக்களை கடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு.
தெரு நாய்களுக்கு
1)தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது
2)தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது
3)ஒரே இடத்தில் அதிக நாய்கள் இருக்கும் பட்சத்தில் அதை மீட்டு வேறு இடத்தில் விடுவது போன்ற நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு
மேலும் பொதுமக்களிடையே ரேபிஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாய்கள் பிறந்த பிறகு போடப்பட வேண்டிய ஊசிகள் மருந்துகள் என்ன என்று நாய் வளர்ப்போர் தெரிந்துகொள்ளும் அளவு அரசு விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
மேலும் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் சரியான முறையில் தடுப்பு ஊசி போட்டு வளர்க்கிறார்களா?? அதேபோல் வீட்டில் வளர்க்கும் நாய்கள் நோய்வாய்ப்பட்டு சரியாகாத பட்சத்தில் தெருக்களில் கொண்டு சென்று விட்டுவிடுகின்றனர். ஆகவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் ஆய்வு நடத்தப்பட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறிப்பாக சமீபமாக டி.ஆர். நகரில் சிறுவர்கள் உட்பட 4 பேர் நாய் கடித்து காயமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களில் தெரு நாய்கள் கடித்ததில் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Government officials are not paying attention to controlling dogs Social activists blame