நிலத்தகராறு.. வீடு புகுந்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு!
Land dispute Four people stabbed to death in their home
திருவண்ணாமலை ஆரணி அருகே நிலத்தகராரில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஆரணி அருகே மெய்யூர் கிராமத்தை சேர்ந்த சேகர், வசந்தம்மாள், தம்பதிக்கு குமரேசன், லோகேஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த குடும்பத்துக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் நிலத்தகராறில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது என கூறப்படுகிறது.
நிலத்தகராறு சம்பந்தமாக ஏற்கனவே இரு குடும்பமும் வழக்கு தொடரப்பட்டு இருந்தநிலையில் இதில் சேகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக சொல்லப்படுகிறது . இதையடுத்துஅந்த நிலத்தில் இருக்கக்கூடிய மரம் செடிக்கொடிகளை அகற்ற வேலை ஆட்களுடன் சேகர் சென்றபோது. சேகருக்கும் மாதவனுக்கும் மீண்டும் பிரச்சினை எழுந்தது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சேகரின் வீட்டுக்குள் புகுந்த சுமார் 8 பேர் கொண்ட கும்பல் சேகர், வசந்தம்மாள், குமரேசன், லோகேஸ் ஆகியோரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இந்த தாக்குதலில் சேகருக்கும் குமரேசனுக்கும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்து தற்போது ஆரணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆரணி போலீசார் தலைமறைவாக உள்ள மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினறையும் போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Land dispute Four people stabbed to death in their home