பாரதியார் வேடத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை.. பாட்டுப் பாடி அசத்தல் விழிப்புணர்வு...!! - Seithipunal
Seithipunal



புதுக்கோட்டையில் உள்ள டி. இ. எல். சி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருபவர் யுனைசி கிறிஸ்டி ஜோதி. இவர் பாரதியார் போல் கோட் மற்றும் தலைப்பாகை அணிந்து முகத்தில் மீசை வரைந்து, பாட்டு பாடி பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் இந்த பாரதியார் கெட்டப்பில் ஆசிரியர் கிறிஸ்டி வீதி வீதியாக சென்று பொது மக்களிடம் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி வீதியில் "பிள்ளைகளே ஓடி வாருங்கள்.. இங்கே பள்ளிக்கூடம் திறந்து இருக்குது.."

"விலையில்லா பாடப்புத்தகம் கிடைக்குது. வித விதமாய் பொருட்களும்  தரமாய் கிடைக்குது.. கல்வி உதவித் தொகையும் கிடைக்குது... காலை, மதிய உணவு இருக்குது..நீங்கள் பள்ளி வந்தால் போதும் என்று அரசு சொல்லுது..." என்று ஆசிரியர் கிறிஸ்டி பாடி ஆட, அனைவரும் அவரை ஆர்வமாய் பார்க்கின்றனர். 

ஆசிரியர் கிறிஸ்டியிடம் இது குறித்து கேட்ட போது, "எங்கள் வீட்டில் எல்லோருமே அரசுப் பள்ளியில் படித்து  ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் இருக்கிறோம். 

 

ஆனால் இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர். உண்மையில் தனியார் பள்ளியை விட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்கள். 

எனவே அரசுப்பள்ளிகள் குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கலைகளின் வழியே பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்" என்று ஆசிரியர் கிறிஸ்டி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government School Teacher Creates Awareness Among Public in Bharathiyar Get Up


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->