R. Sarathkumar: மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! - Seithipunal
Seithipunal


மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்களுக்கு உரிய வசதிகள் சரிவர செய்து தரப்படவேண்டுமென சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

"ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மருத்துவசேவை கட்டாயம் தேவை. வருமானம் என்பதைத் தாண்டி இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் உரிய வசதிகள் சரிவர செய்து தரப்படவேண்டும்.

சி.சி.டி.வி. உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். இது போன்ற உள்கட்டமைப்புகள் அவசியம் என்பதை உணர்ந்து ஆளும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government should fulfill demands of doctors immediately - Sarathkumar insists


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->