கொடைக்கானலை சுற்றி பார்க்க வெறும் 150 ரூபாய் இருந்தால் போதும் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலை சுற்றி பார்க்க வெறும் 150 ரூபாய் இருந்தால் போதும் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு.!

நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு படை எடுத்து செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களின் ஒரு சிலர் சொந்த வாகனங்களிலும், ஒரு சிலர் பொது போக்குவரத்திலும் செல்கின்றனர்.

இந்த நிலையில், கொடைக்கானலுக்குச் செல்பவர்கள் அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசிப்பதற்கு ஏதுவாக பொது போக்குவரத்து உதவியுடன் ரூ.150-க்கு கொடைக்கானலை சுற்றுப்பார்க்கும் புதிய திட்டத்தை அரசு போக்குவரத்து கழகம் ஆரம்பித்துள்ளது.

அவ்வாறு செல்லும் இந்த பேருந்து கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா வழியாக சுற்றுலா பயணிகளை ஏரியில் இறக்கி விடுகிறது. 

இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு 150 ரூபாயும், சிறியவர்களுக்கு 75 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த புதிய திட்டம்  சுற்றுலாப் பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் சுலபமாக அனைத்து இடங்களை சென்று பார்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government transport start new scheme for kodakanal tour in 150 rs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->