#BigBreaking :: தமிழகம் vs தமிழ்நாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி... ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கடந்த ஜனவரி 4ஆம் தேதி நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் பாராட்டு விழாவில் தமிழ்நாட்டை தமிழகம் என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும் என பேசி இருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி சார்பாக தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தி குறிப்பில் "2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சாரம் தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வத் தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வரலாற்று பண்பாடு பற்றி பேசும் பொழுது "காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க "தமிழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டை சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அவமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் எதார்த்தத்திற்கு புறம்பானது" என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது பேச்சு அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்". என ஆளுநர் ஆர்.என் ரவி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு vs தமிழகம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Ravi explains about Tamil Nadu controversy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->