ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. முதல்வருக்கு தொலைபேசி மூலம் ஆளுநர் ரவி ஸ்பெஷல் அழைப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே அரசியல் ரீதியில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வருகிறது. ஆளுநர் ரவி பங்கேற்கும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம், இந்துத்துவா கொள்கைகளை பற்றி பேசுவதால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

அதேபோன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்களுக்கு தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். மேலும் கடந்த ஜனவரி 9ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்ட தொடரின் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநர் உரையில் சில பகுதிகளை நீக்கியும் சேர்த்தும் வாசித்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்க மறுத்து குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என பேசி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தொலைபேசியின் மூலம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை தொடர்பு கொண்டு உள்ளார். நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் வழங்கிய பொங்கல் விழா விருந்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் தற்பொழுது தமிழக ஆளுநர் குடியரசு தின விழா தேநீர் விருந்துக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் தேநீர் விருந்து கலந்து கொள்வாரா..? மாட்டாரா..? என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Ravi invite CM Stalin to attend tea party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->