நரிக்குறவர் இன மக்களுக்கு பாலபிஷேகம்.. அரசு பேருந்து பணியாளர்கள் அதிரடி.! பாராட்டுகளை பெரும் வீடியோ.!
Govt bus driver and conductor Respect narikkuravar peoples
சென்னை பெரம்பூரில் இன்று இருளர் இன மக்கள் அரசு பேருந்தில் ஏற முயற்சித்தபோது ஓட்டுநரும், நடத்துனரும் அவர்களது காலில் பாலபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து வரவேற்றனர்.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை அரசு பேருந்திலிருந்து துர்நாற்றம் வீசுகிறது என்று கூறி பேருந்திலிருந்து நடத்துனர் இறக்கி விட்டார். இதனால், விரக்தியில் அந்த மூதாட்டி பேருந்து நிலைய நேரக் கட்டுப்பாடு அலுவலகம் சென்று இதுகுறித்து நியாயம் கேட்டார். இது சமூக வலைதளங்களில் மிக பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதுபோல நாகர்கோவிலில் நரிக்குறவர் இன மக்களை பாதிவழியில் இறக்கி விட்ட வீடியோ வைரலாகி சமூக வலைத்தளங்களில் மீண்டும் கண்டனங்களை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அந்த ஓட்டுநரும் நடத்துநரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அடித்தட்டு மக்கள் இப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்ற நிலையில் பெரம்பூரில் உள்ள பணிமனையில் இருளர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் அரசு பேருந்தில் ஏற வந்த பொழுது அவர்களுக்கு ஓட்டுநரும் நடத்துனரும் பாலபிஷேகம் செய்து வரவேற்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Govt bus driver and conductor Respect narikkuravar peoples