செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்.! - Seithipunal
Seithipunal


செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று காலை பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. இந்த அரசுப் பேருந்தை மோகன் என்ற ஓட்டுநர் ஒட்டி வந்துள்ளார். அப்போது, ஓட்டுநர் மோகன் ஒரு கையில் செல்போன் பேசியவாறும், மற்றொரு கையில் பேருந்தை இயக்கியும் வந்துள்ளார். 

இந்த செயலை பயணி ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான செய்தி இன்று செய்தித்தாள்களில்  வந்ததையடுத்து ஓட்டுநர் பணியின் போது செல்போன் பயன்படுத்தி பேருந்தை இயக்கிய குற்றத்திற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  

அந்த பரிந்துரையின் படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காரைக்குடி பொது மேலாளர் அந்த ஓட்டுனரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இதேபோல் யாரேனும் செல்போன் பயன்படுத்தியபடி பேருந்து  இயக்குவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus driver dismiss for use mobile on duty in rameshwaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->