விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே நாச்சிமாபாளையத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான சுப்பிரமணியன். இவர் மனைவி பழனியம்மாள். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி கெட்டிச்செவியூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  

அப்போது, வேகமாக வந்த அரசு பேருந்து ஒன்று பழனியம்மாள் மெது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியம், கோபி மூன்றாம் வகுப்பு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி அன்று தனக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி விசாரணை செய்த நீதிபதி, "அரசு போக்குவரத்து கழகம் சுப்பிரமணியத்திற்கு ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 800 நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு நஷ்ட ஈடு தொகை செலுத்தாததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதன் பின்னரும் நஷ்ட ஈடு தொகை செலுத்தாததால் அரசு பேருந்து ஒன்றை பறிமுதல் செய்ய கடந்த நவம்பர் மாதம் 25-ந் தேதி அன்று நீதிபதி தயாநிதி உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் நேற்று கோபி பேருந்து நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து ஈரோடு நோக்கி செல்வதற்கு தயாராக இருந்த அரசு பேருந்தை பறிமுதல் செய்து, அந்த பேருந்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus seize for not compensation family in road accident died


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->