#விருதுநகர் || அரசு பேருந்து டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 10 பேர் காயம்.!
Govt bus tangar lorry accident in virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் அரசு பேருந்து டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது ஆத்திபட்டி அருகே பேருந்து சென்ற போது, முன்னாள் சென்ற டேங்கர் லாரி ஒன்று நாய் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பேருந்து லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பேருந்தின் முன்பக்கம் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Govt bus tangar lorry accident in virudhunagar