நோட்டுக்கு சீட்டு.! அரசு கல்லூரி முதல்வர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டி அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் சுமார் 4000 மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கலந்த ஜூன் மாதம் நடைபெற்று முடிந்தது. முதற்கட்ட கந்தனையும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காத போது முதலில் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர். 

அடுத்தடுத்து நடைபெற்ற கலந்தாவின் போது தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாணவர்கள் கல்லூரி பாகத்தின் அனுமதியோடு மற்ற பாடப்பிரிவுக்கு மாறியுள்ளனர். இவ்வாறு ஒரு பாடத்தில் இருந்து மற்றொரு பாடப்பிரிவுக்கு மாறுவதற்காக தாவரவியல் துறை பேராசிரியர் ரவி மாணவர்களிடமிருந்து பலன் பெற்றதாக கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர் ரவி மீது முதலமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டிஜிபி ஆகியோருக்கு தகுந்த ஆதாரங்களுடன் மாணவ மாணவிகள் புகார் அனுப்பி இருந்தனர். அதற்கிடையே கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் இடையே நடந்த உரையாடல் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலானது. 

கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் வாங்கிய கவரில் பத்தாயிரம் ரூபாய் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில் மாணவரை பார்த்து சீக்கிரம் கொடுத்து விடுங்க. அப்போதுதான் இடம் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் கூறுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஊட்டி கலைக் கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் பேராசிரியர் ரவி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt college principal have been suspended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->