கத்திக்குத்து - மருத்துவர் சங்கம் இன்று தர்ணா போராட்டம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த பாலாஜி என்பவரை வாலிபர் ஒருவர் தனது தாயாருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி கத்தியால் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். 

இதனால் மருத்துவர் படுகாயமடைந்துள்ளார். உடனே அவர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மருத்துவரை கத்தியால் குத்திய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில், அந்த வாலிபரின் பெயர் விக்னேஷ் என்பதும், புது பெருங்களத்தூர் காமராஜர் நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை தர்ணாவில் ஈடுபட உள்ளனர். இதன்படி காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா நடைபெறும் என்று அரசு மருத்துவ சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt doctor association strike for gundy doctor attack issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->