11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பான் எண்ணை மற்றொருவருக்கு வழங்கிய வினோத சம்பவம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் டில்லி. இவர், மாமல்லபுரம் அருகே நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். 

இவர், கடந்த 2019-ம் ஆண்டு தன்னுடைய மாத சம்பளம் மற்றும் வங்கி தேவைக்காக பான் கார்டுக்கு விண்ணப்பித்து பான் எண் பெற்றார். அந்த எண்ணை அவர் தனது வங்கி கணக்குடன் இணைத்துள்ளார். 

இந்த நிலையில் டில்லி தனது வங்கியின் மூலம் ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் போன்றவற்றில் உள்ள எழுத்து வித்தியாசத்தை சரி செய்யவும், வங்கி கணக்கு எண்ணில் செல்போன் எண்ணை மாற்றவும், விண்ணப்பித்து இருந்தார். அப்போது, அவருடைய பான் எண்தவறாக உள்ளதாக வங்கி தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விசாரணை செய்த போது அவரது பெயரையே கொண்டுள்ள வேறு நபருக்கும் அதே பான் எண் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து வங்கி தரப்பினர் வேறு நபரின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு இது குறித்து விசாரணை செய்தனர். 

அதில், அந்த நபர் திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தபால் துறை ஊழியர் டில்லிபாபு என்பது தெரிய வந்தது. இந்த பான் கார்டில் ஒருவர் பெயர் டில்லி. மற்றொருவர் டில்லிபாபு என்று பெயர் மட்டுமே மாறியுள்ளது. ஆனால், தந்தை பெயர் பிறந்த தேதி என்று அனைத்தும் ஒன்றாகவே உள்ளது.

இவர்களில், டில்லிபாபுவுக்கு கடந்த 2008-ம் ஆண்டு பான் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுமார் 11 ஆண்டுகள் கடந்து டில்லிக்கும் அதே பான் எண் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt giving same pan number to another person after eleven years


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->