தமிழக எல்லைகளில் கொட்டப்படும் கேரள கழிவுகள்! ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கை பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நிபுணர் குழு விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆனைமலை பகுதியில் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட மாதிரிகளின் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என விசாரணை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மற்றொரு வழக்கான தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா குருவன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் கிராமங்களில் மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றி வருவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆனைமலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் மாநிலம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தபோது கடும் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள் கழிவு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 8ம் தேதி நடக்கும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Green Tribunal orders to file report on Kerala waste dumped on TNborder


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->