மன்னிப்பு கேட்டாலும் பேசிய உண்மை மாறாது - சீமான் பேட்டி! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டாலும் பேசிய உண்மை மாறாது. அது தான் உண்மை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது சத்தியமான உண்மை. 

அன்னபூர்ணா உரிமையாளர் கேட்ட கேள்வி இப்போது நாடு முழுவதும் பரவி விட்டது. அதை அதிகாரம் கொண்டு பணிய வைக்கிறார்கள்.

அன்னபூர்ணா உரிமையாளர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவிச்சாலும், அந்த கேள்வியில் உள்ள உண்மையை சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது.

மதுவை ஒழித்துவிட்டு திமுக வெல்லட்டும்.மதுவிற்கு எதிராக நீண்ட காலமாக போராடுபவர் எங்கள் ஐயா இராமதாஸ் அவர்களை மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைக்க வேண்டும். என்னை அந்த மாநாட்டிற்கு அழைக்கவில்லை.

முதல்வரின் வெளிநாட்டு பயணங்களால் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொல்கிறார். இதற்கு முதல்வரும் ஆமாம் என்று சொல்கிறார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?"  என்று சீமான் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GST Nirmala Sitharaman BJP naam tamilar katchi Seeman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->