சென்னை : கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் 6 மாதங்களுக்கு மூடல்.! - Seithipunal
Seithipunal


கிண்டி சிறுவர் பூங்கா பராமரிப்பு பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா சென்னை மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

இந்த பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் சென்னையை மட்டும் இன்றி தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வந்து நேரத்தை செலவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் அடுத்த 6 மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிண்டி சிறுவர் பூங்காவை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்துவதற்கும், மாற்றி அமைப்பதற்கும் 6 மாதங்கள் வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Guindy childrens park closed from today to 6 months


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->