மதுரை போலீசார் கொலை வழக்கு - குற்றவாளி சுட்டு பிடிப்பு..!
gun shoot to accuest in madurai police murder case
கடந்த 19 ஆம் தேதி மதுரையில் தனிப்படை காவலர் மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் காவலர் மலையரசன் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநரான மூவேந்திரன் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதன் படி போலீசார் மூவேந்திரனை பிடித்து விசாரித்ததில், அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார். இதை பார்த்த போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மூவேந்திரன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.
அவரை மீட்ட போலீசார் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மதுரை காவலர் கொலை வழக்கில் போலீசார் ஒருவரை சுட்டுப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
gun shoot to accuest in madurai police murder case